The Indian Times

ஜிபி முத்துவை காண திரண்ட பல்லாயிரக்கணக்கானோர்… மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த கன்னியாகுமரி

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து, நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர். மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்.ஆனால் ஜிபி முத்து குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியாது என வெளியே கிளம்பிவிட்டார்

Advertisement

இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை கொடுத்தது,தற்போது இவர் கன்னியாகுமரியில் கடை திறப்பு விழா ஒன்றிற்கு வருகை தந்துள்ளார் . இவரை காண அங்கு மக்கள் கூட்டம் அதிகம் கூடியது.ஜிபி முத்துவை காண ரசிகர்கள் ஆர்வமாகி மக்கள் தொடர்ந்து வருகை தந்து வந்தனர்.இதனை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜிபி முத்து.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா முன்னணி நடிகர்களுக்கு கூட இவ்வளவு கூட்டம் கூடுமா என்பது சந்தேகம் என கூறி வருகின்றனர்

Embed video credits : Gpmuthu Official

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in