பிரதமர் மோடியிடம் இருந்து கவுரவ டாக்டர் பட்டத்தினை பெற்றார் இசைஞானி இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஆறிலிருந்து அறுபது வரை இவரது இசையை ரசித்து கேட்காதவர்கள் எவரும் இல்லை.அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இளையராஜா.இவர் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.இவருக்கு 2010 ஆம் ஆண்டு உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பிரதமர் மோடியிடம் இருந்து கவுரவ டாக்டர் பட்டத்தினை பெற்றார் இசைஞானி இளையராஜா 1

விளம்பரம்

இவரது மகன் யுவன் சங்கர் ராஜா,கார்த்திக் மற்றும் மகள் பவதாரிணி மற்றும் தம்பி கங்கை அமரன் ,அவரது மகன்கள் எல்லோரும் சினிமாவில் பிரபலங்களாக வலம் வருகின்றனர். இவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் தந்தையை போல பெரிய இசையமைப்பாளராக தமிழ் சினிமாவை வலம் வருகிறார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இளையராஜா இவர் இசையமைத்த பல பாடல்கள் பெரும் ஹிட் அடித்துள்ளது.தற்போதும் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.அண்மையில் இவர் இசையில் மாமனிதன் படம் வெளியாகியது.தற்போது இவருக்கு அடுத்து இசையமைத்த விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன் படம் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

பிரதமர் மோடியிடம் இருந்து கவுரவ டாக்டர் பட்டத்தினை பெற்றார் இசைஞானி இளையராஜா 2

விளம்பரம்

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை மாநிலங்களவை நியமன எம்பியாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் இன்று அவருக்கு பிரதமர் மோடி கவுரவ டாக்டர் விருதினை வழங்கியுள்ளார்.பிரதமர் மோடி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி கிராம கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருந்தார்,அந்த மேடையில் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment