The Indian Times

Real ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய Reel ஜெயலலிதா Kangana Ranaut !

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் பிரபல நடிகையுமான ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “தலைவி” படத்தை தெய்வத் திருமகள், தலைவா , தேவி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் ‘கங்கனா ரனாவத்’ மற்றும்

Advertisement

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் கதாபாத்திரத்தில் ‘அரவிந்த் சாமியும்’ நடித்துள்ளனர்.தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 2019 இல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2020 டிசம்பரில் முடிவடைந்தது. கடந்த ஏப்ரலில் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் லாக்டவுனால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த மாதம் 10 தேதியன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவகத்தில் மலர் பூச்செண்டுடன் மரியாதை செலுத்தினார். பின்னர் கை கூப்பி வணங்கி பிரார்த்தனை செய்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Bingoo Box youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in