The Indian Times

முதன்முறையாக சூர்யா படத்தில் Heroine ஆக களமிறங்கும் இயக்குனர் ஷங்கரின் மகள்!

இந்தியன், முதல்வன், சிவாஜி, ஐ, எந்திரன் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை நமக்கு அளித்த பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் தற்போது தமிழ் திரைப்படத்தில் முதன் முறையாக ஹீரோயினாக அறிமுகமாகிறார்.கொம்பன் படத்திற்குப் பிறகு மீண்டும் ‘விருமன்’ திரைப்படத்தில் இயக்குனர் முத்தையாவும் நடிகர் கார்த்தியும் இணைகிறார்கள். இந்த படத்தில் கார்த்தியின் ஜோடியாக

முன்னனி இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி நடிகையாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இயக்குனர் முத்தையாவுடன் கைகோர்க்கும் முதல் படம் இதுவாகும். சூர்யா-ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மன்ட் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Advertisement

இதனைத் தொடர்ந்து சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் என் அடுத்த படத்தை கார்த்தி மற்றும் இயக்குனர் முத்தையா உடன் தயாரிப்பதில் மகிழ்ச்சி என்றும் அதிதி ஷங்கரை வரவேற்கிறேன்! அனைவரின் மனதையும் வெல்லப் போகிறாய்! என்றும் அடுத்தடுத்து ட்வீட்களைப் பதவிட்டார். இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்த மாதம் 18 ஆம் தேதியில் தேனி மாவட்டத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in