The Indian Times

ராக்கி பாயை அடிக்கும் மகள்… மகளுடன் கொஞ்சி விளையாடும் ராக்கி பாய்… பார்க்கவே எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ்.இவர் முதன்முதலில் ஜம்படா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.யாஷ் முதல் முறையாக கதாநாயகனாக நடித்த படம் 2008 ஆம் ஆண்டு வெளியாகிய ராக்கி படம் ஆகும்.அதன்பின் தொடர்ச்சியாக கன்னடத்தில் கதாநாயகனாக பல படங்களை நடித்து வந்தார்.இவர் நடிப்பில் வெளியாகிய பல படங்கள் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றது.இருந்தாலும் இவருக்கான சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.அதற்காக தான் கடுமையாக போராடி வந்தார்.இந்த போராட்டத்திற்கு பலனாக தான் கேஜிஎப் படம் இவர் கைக்கு வந்தது.இப்படத்தில் நடித்து உலக சினிமா வரை மாபெரும் உச்சம் அடைந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பினை பெற்று இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பினை கூட்டியது.இறுதியாக இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகி பலத்த வரவேற்பினை பெற்று புகழின் உச்சத்துக்கே யாஷை கொண்டு சென்றுவிட்டது.5 மொழிகளில் வெளியாகிய இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி 1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளி கன்னடத்தில் முதல் 1000 கோடி வசூலை பெற்ற படமாக மாறியது.தற்போது யாஷ் தனது அடுத்த பட வேலைகளை பார்க்க தொடங்கியுள்ளார்.இப்படமும் பாண் இந்திய படமாக இருக்கும் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

தற்போது யாஷ் புதிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் தனது மகளுடன் கொஞ்சி விளையாண்டு அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது,மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் என்னதான் ஊருக்கு ராக்கி பாயாக இருந்தாலும் பெற்ற மகளிடம் அடிவாங்கி தான் ஆக வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்மேலும் வீடியோவை ஷேர் செய்து இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in