The Indian Times

பயம்காட்டி கொலைநடுங்க வைக்கும் தனுஷ்… நானே வருவேன் PROMO

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில்நடித்திருந்தார்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் தெலுங்கில் சார் படத்திலும் ,இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும் நடித்து வருகிறார்.இதில் தனுஷுக்கு அடுத்ததாக அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் நானே வருவேன் படம் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது.நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் வெளிவரும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது

Advertisement

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது படத்தின் ப்ரோமோவை மொத்தமாக வெளியிட்டுள்ளது படக்குழு.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.நடிப்பில் மிரட்டும் தனுஷின் நானே வருவேன் ப்ரோமோ படத்தின் எதிர்பார்ப்பினை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு நடிப்பில் பயம் காட்டியுள்ளார் தனுஷ்

Embed video credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in