The Indian Times

பாக்கியா உண்மையிலயே SMART தான்… பாக்கியாவை புகழ்ந்து தள்ளி ராதிகாவிடம் மாட்டிய கோபி… செம்ம கடுப்பாகிய ராதிகா… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

ராதிகா பலமுறை கெடுத்தும் ராதிகா நிறுவனத்திடம் இருந்து கேட்டரிங் ஆர்டரை வாங்கிவிட்டார் பாக்கியா.இதனால் ராதிகா கடும் கோவத்தில் உள்ளார்.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.வீடியோவில் இதுகுறித்து கணவர் கோபியிடம் ராதிகா கூறவே,உடனே கோபி வீட்டிற்குள் அப்பாவியாக இருப்பாள் பாக்கியா இப்போ இவ்வளவு வளர்ந்துட்டாலே,அவளுக்குள்ளேயும் ஸ்மார்ட்னெஸ் உள்ளதே என புகழ்ந்து பேசவே,ராதிகா செம்ம கடுப்பாகி கோபியை திட்டி தீர்த்துள்ளார்.இது ரசிகர்களிடம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

https://www.youtube.com/watch?v=629CXu0NF24

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in