The Indian Times

யுவனின் மெலடி இசையில் விஷாலின் லத்தி படத்தின் 2nd single பாடல் வெளியாகியது

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிகர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர்,தயாரிப்பாளர் தமிழ் சினிமாவை கலக்குபவர் விஷால் மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து துப்பறிவாளன் 2ஆம் பாகத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மலையாளத்தில் வில்லன் படத்தில் மோகன் லாலுக்கு வில்லனாக நடித்து அசத்தினார்.கடந்த முறை வெளியாகிய வாகை சூட வா படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.அதனை தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

Advertisement

அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் தற்போது ஊஞ்சல் மனம் என இரண்டாவது பாட்டினை வெளியிட்டுள்ளது படக்குழு.கார்த்திக் நேத்தா பாடல் வரிகளில் யுவன் சங்கர ராஜா இசையமைத்து சுவேதா மோகன் உடன் பாடியுள்ளார்.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்பாடலை கேட்ட ரசிகர்கள் பல நாட்கள் கழித்து ஒரு நல்ல பாட்டை கேட்ட அனுபவம் என கூறி வருகின்றனர்.

Embed video credits : U1 RECORDS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in