The Indian Times

யாரென்று தெரிகிறதா?இவன் தீ என புரிகிறதா? KIL LER LOOK-ல் LEGEND SARAVANAN

சரவணா ஸ்டோர் சரவணன் முதல் முறையாக அறிமுகம் ஆகி இருக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இப்படத்தினை இயக்குனர் ஜெடி ஜெரி இயக்கியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சரவணனே இப்படத்தினை அதிகபொருட்செலவில் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் ரோபோ சங்கர்,பிரபு,மயில்சாமி,சுமன் , விஜயகுமார், விவேக், ஹிந்தி நடிகை ஊர்வஷி, நாசர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் அண்மையில் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியது.படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் இருந்து பெற்றது.

Advertisement

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படம் நல்ல வசூலை தான் பெற்றுள்ளது.ஒருவரின் முதல் படமே பல கோடி வரை வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். 52 வயதிலும் ஹீரோவாக நடித்து நடிப்பு நடனம் ஆக்சன் என எல்லாவற்றிலும் அசத்திய அண்ணாச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.தற்போது இவர் அடுத்ததாக முழு காதல் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் நடைபெற உள்ளது

Advertisement

இவர் தற்போது அடுத்தப்படத்திற்காக தாடி மீசையுடன் கெத்தாக மாறி புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தினை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது.ரசிகர்கள் இது நம்ம சரவணனா அடையாளமே தெரியலை செம்ம மாஸ் ஆ இருக்காரே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in