The Indian Times

நானி வெறிபிடித்த மிருகமாய் வேட்டையாடும் “தசரா” TRAILER இதோ…

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி,தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் நடிப்பிற்கு ரசிகர்கள் உள்ளனர்.இவர் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகிய அட்டா சம்மா படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.வெப்பம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.அதன்பின் இவருக்கு தமிழில் வெளியாகிய நான் ஈ படம் நல்ல வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நானி தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார். இடையில் சில படங்கள் சரியாக வரவேற்பினை பெறாததால் இனி நடிக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் தசரா படத்தில் நடித்து வருகிறார்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்,கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது.

Advertisement

இந்நிலையில் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ட்ரைலரில் நானி நடிப்பால் அனைவரையும் மிருகத்தனமாக மிரட்டியுள்ளது ரசிகர்களிடம் படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது.இப்படம் நானிக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.நானி ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in