புடிக்காம ஓட்டுனேன் REEL-U இனிமே நான் உன் ஆளு… வா வாத்தி முழு வீடியோ பாடல் இதோ

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் இணைந்த சரத்குமார் தேவயானி... சித்தார்த் படத்தின் பூஜை புகைப்படங்கள்

புடிக்காம ஓட்டுனேன் REEL-U இனிமே நான் உன் ஆளு... வா வாத்தி முழு வீடியோ பாடல் இதோ 1

விளம்பரம்

அண்மையில் இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் தெலுங்கில் சார் படத்திலும் நடித்து வருகிறார்.அண்மையில் தனுஷ் நடிப்பில் உருவாகிய நானே வருவேன் படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

புடிக்காம ஓட்டுனேன் REEL-U இனிமே நான் உன் ஆளு... வா வாத்தி முழு வீடியோ பாடல் இதோ 2

விளம்பரம்

தற்போது நடிகர் தனுஷ் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் நடித்த வாத்தி படம் அண்மையில் வெளியாகியது.முதல் முறையாக தனுஷ் நடிப்பில் இரண்டு மொழிகளில் உருவாகும் படம் இது ஆகும்.சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் இப்படத்தினை இணைந்து தயாரித்துள்ளனர்.மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் தோட்டப்பள்ளி மது.சமுத்திரக்கனி,நரேன்,என பலரும் நடித்துள்ளனர்.ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்று மாபெரும் ஹிட் அடித்த வா வாத்தி பாடலின் வீடியோ சாங் வெளியாகியுள்ளது.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மியின் கலக்கலான புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Aditya music tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment