The Indian Times

சமந்தா கணவருடன் மழையில் ஆட்டம் போட்ட சாய் பல்லவி | love story

ப்ரேமம் படத்தில் தன் க்யூட் எக்ஸ்பிரஸன் மூலம் இன்று வரை இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் சாய் பல்லவி. ப்ரேமம் படத்தை தொடர்ந்து , தனுஷுடன் மாரி 2 , சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் இவர். தற்போது இவர் தெலுங்கில் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு சாய் பல்லவி ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சமந்தாவின் கணவர் நாக சைதன்யா தெலுங்கில் மிக பெரிய ஹீரோ என்பது அனைவருக்கும் தெரியும்.

தற்போது இவர்கள் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் லவ் ஸ்டோரி.லவ் ஸ்டோரி சேகர் கம்முலா எழுதி இயக்கி வரவிருக்கும் இந்திய தெலுங்கு மொழி காதல் நாடக படம். இந்த படத்திற்கு பவன் சி இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் விஜய் சி.குமார் , மார்தண்ட் கே. வெங்கடேஷ்.கொரோன தொற்றுநோய் காரணமாக லவ் ஸ்டோரியின் தயாரிப்பு மற்றும் வெளியீடு தாமதமானது. படம் 1621 ஏப்ரல் 16 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் எவோ எவோ கலலே என்ற தெலுங்கு பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in