The Indian Times

குக்கு வித் கோமாளி அஸ்வினின் குட்டி பட்டாஸ் ப்ரோமோ டீசர்!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. தற்போது இந்த நிகழ்ச்சியில் மிக்ஸ்வும் பிரபலமான குக் என்றால் அனைவரும் கூறுவது அஷ்வினை தான். அஸ்வின் குக்கு வித் கோமாளிக்கு முன்பே நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார். குக்கு வித் கோமாளியின் கலந்துகொண்ட பிறகு அவரது ரேஞ்சே மாறிவிட்டதா என்றே கூறலாம். பல பெண்களின் கனவு காதலனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் அஸ்வின். இந்நிலையில் தற்போது இவரது குட்டி பட்டாசு என்ற பாடலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

Advertisement

இந்த பாடலை வெங்கி இயக்கியுள்ளார். இந்த பாடலில் அஸ்வினுக்கு இவருக்கு ஜோடியாக ரெபா மோனிக்கா ஜான் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்துள்ளார். பிகில் படத்தில் ஆசிட் மூலம் காயம்பட்ட பெண்ணாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தார். இது போக இவர் மலையாள படத்திலும் நடித்துள்ளார். தற்போது அஸ்வின் மற்றும் ரெபா நடித்த குட்டி பட்டாசு பாடலின் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது. கூடிய விரைவில் குக்கு வித் கோமாளி அஸ்வினை திரையில் கதாநாயகனாக பார்க்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in