The Indian Times

ரொமான்டிக் ஹீரோ ஆக மாறிய தனுஷ்…வெளியாகியது மேகம் கருக்காத பெண்ணே பாடல்..| THIRUCHITRAMBALAM 2ND SINGLE

இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் முதல் மகன் இயக்குனர் செல்வராகவன் , இரண்டாவது மகன் தனுஷ். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் ஆகும்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற நடிகர்கள் சிலர் அதில் இவரும் ஒருவர்.அமிதாப்பச்சன் உடன் நடிக்கும் அளவிற்கு நடிகர் தனுஷ் இன்று உயர்ந்துள்ளார்.தற்போது ஹாலிவுட் வரை நடிகர் தனுஷ் கொடி பறக்கிறது. இவர் நடித்துள்ள க்ரே மேன் என்ற ஹாலிவுட் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் தனுஷ் தெலுங்கிலும் நேரடியாக கால்தடத்தினை பதிக்க உள்ளார்.இயக்குனர் வெங்கி இயக்கத்தில் தனுஷ் சார் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தமிழில் வாத்தி என வெளியாக உள்ளது.அதே சமயம் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

Advertisement

இப்படத்தில் அண்மையில் தனுஷ் எழுதி பாடிய தாய் கிழவி பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.தற்போது அதேபோல் படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.மேகம் கருக்காத பெண்ணே பெண்ணே  என்ற பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார்.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பாடலில் தனுஷ் ரொமான்டிக் காட்சிகளை பார்க்க முடிகிறது.தனுஷ் ரசிகர்கள் இப்படத்திற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.மேலும் இப்படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in