The Indian Times

ரோபோ சங்கரை பங்கமாக கலாய்த்த வரலட்சுமி..OSCAR நமக்கு கிடையாது சார் ,பார்த்திபனுக்கு

பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி .தந்தையை போல சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என உள்ளே நுழைந்தவர்.சாதித்தாரா என்றால் அப்பாவை போல் சாதிக்கவிஓஐ அப்பாவை விட அதிகமாக நடித்து சாதித்துள்ளார் என்று கூறினால் தான் சரியாக இருக்கும்.தற்போது சினிமா உலகை கலக்கி வரும் நடிகையாக வலம் வருகிறார்.போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் வரலட்சுமி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இருப்பினும் சினிமா ரசிகர்களிடம் இவர் சென்றடையவில்லை.பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் தரை தப்பட்டை படத்தில் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தினையும் பெற்று அசத்தினார்.ஆண்களுக்கு இணையாக கதாநாயகி வில்லி என இரண்டையும் கலந்து குடித்து சினிமாவை அசர வைத்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

Advertisement

தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.இவர் அறிமுக படத்திற்கே சிறந்த அறிமுக நடிகை என 2 விருதுகளை பெற்றுள்ளார்.கதாநாயகி வேடமாக இருந்தாலும் சரி,வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கதாநாயகர்களுக்கு சரிசமமாக அடித்து நொறுக்கி வருகிறார்.இவர் சமந்தா நடிப்பில் வெளிவர இருக்கும் யசோதா படத்தில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் வரலட்சுமி.தந்தையை எதிர்பார்க்காமல் தனது கடின உழைப்பால் இத்தகைய இடத்தினை அடைந்துள்ளார் என்றால் மிகையாகாது.மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

தற்போது இவர் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுவருகிறது. இப்படம் ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கப்பட்ட படம் ஆகும்.இதனால் இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார்,ரோனோ ஷங்கர்,பிரிகிடா என பலரும் நடித்துள்ளனர். தற்போது படப்பிடிப்பின் பொழுது எடுத்த வீடியோவை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,அதில் நடிகர் பார்த்திபனால் மட்டுமே இப்படி படங்கள் எடுக்க முடியும் என கூறி பாராட்டியுள்ளார் மேலும் பின்னர் பேசிய ரோபோ சங்கர் இந்த படத்திற்கு ஆஸ்கர் நிச்சயம் என கூறவே ,வரலட்சுமி சரத்குமார் ,நமக்கு இல்லை சார் அவருக்கு என கூறி கலாய்த்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in