The Indian Times

அப்பா தெரியாம பண்ணிட்டா…DON படத்தில் இடம்பெற்ற வசனத்தினை மேடையில் பேசி காண்பித்த சூரி…

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.அந்த இரண்டையும் கொண்ட சூரி வெற்றிபெற்றார்.1999 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியாகிய நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார்.இவர் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் அம்மா வைத்த பெயரை மாற்றிக்கொண்டு தளபதி படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பெயர் ஆன சூர்யா என மாற்றிக்கொண்டார்.அது நாளடைவில் சூரி என மாறியது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாய் நின்று நடிக்க தொடங்கினார்.சரியான வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருந்த சூரிக்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய சூரி இப்படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இதில் இடம் பெட்ரா பரோட்டா காமெடி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது,அன்றுமுதல் சாதா சூரி இப்படத்தில் இருந்து பரோட்டா சூரி என்று மக்களிடம் அறிமுகம் ஆகினார்.தனது கடின முயற்சியினால் தற்போது முன்னணி இடத்திற்கு வந்துள்ளார் நடிகர் சூரி.பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக சூரி நடித்து அசத்தி விட்டார்.தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

Advertisement

அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் சூரி டான் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் வரவேற்பினை பெற்று 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்தது.இப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அப்பா போல் வேடம் அணிந்து கல்லூரிக்கு செல்வார்,அங்கு இவர்கள் இருவரும் தமிழை கொரியன் மொழியில் கலந்து பேசிய நகைச்சுவை மாபெரும் வைரல் ஹிட் ஆகியது.இந்நிலையில் அண்மையில் சூரி கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்த வசனத்தினை அனைவரது முன்பு பேசியும் அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in