The Indian Times

தலைவா….சந்திரமுகி -2 இன்னைக்கு shoot ஆரம்பிக்கப்போகுது என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க…..ராகவா லாரன்ஸ்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி ,மாபெரும் வரவேற்பினை பெற்ற படம் சந்திரமுகி.இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.மேலும் இவர்களுடன் பிரபு,ஜோதிகா,நாசர் வடிவேலு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.வித்யாசாகர் இசையில் உருவாகி இருந்த இப்படம் பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்று அசத்தியது.பல நாட்கள் ஓடி சாதனையும் படைத்தது சந்திரமுகி.இன்றுவரை இப்படத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இன்று வரை இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அதனை காண்பதற்கு ஒரு கூட்டமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே தகவல் வெளியாகி இருந்தது.இதுகுறித்து இயக்குனர் வாசு எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையுமே வெளியிடாமல் இருந்தார்.சில மாதங்களுக்கு முன்பு சந்திரமுகி 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் லாரன்ஸ் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.இப்படத்தில் இந்த முறை நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்காமல் லாரன்ஸ் அவரது ஆசியுடன் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.ஏற்கனவே காஞ்சனா படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கூட்டி வைத்திருக்கும் லாரன்ஸ்க்கு இந்த படத்தின் மூலமும் பெரும் ரசிகர்கள் கூட்டமும் உருவாக அதிக வாய்ப்புள்ளது.

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பெங்களூரு மைசூரில் தொடங்க உள்ளது.இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கு முன்னர் நடிகர் லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தினை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.,இந்த புகைப்படத்தினை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஆசீர்வாதம் வாங்கியுள்ளேன் என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படங்களைக் தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் ராகவா லாரன்சுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.நிச்சயம் இப்படம் இவருக்கு சிறந்தபடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in