The Indian Times

கதையில இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.. விஜய் சேதுபதியின் மைக்கேல் படத்தின் மக்கள் கருத்து

நடிகர் விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ரஜினி,சத்யராஜ்க்கு பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகன் வில்லன் என கலக்கும் ஒரே நடிகர் இவர். வில்லன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களை விசிலடிக்க வைத்தது என்றால் அது விஜய் சேதுபதி ஒருவரே.அந்த அளவுக்கு இவரது நடிப்புக்கு ரசிகர்கள் உள்ளனர்.ரசிகர்களுக்காக நல்ல கதைகளை கொடுக்க பல மெனக்கெடல்களை செய்து வருகிறார் விஜய் சேதுபதி.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய சில படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ரஜினி,கமல்ஹாசன் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தும் மிரட்டிவிட்டார்.தற்பொழுது மலையாளம்,ஹிந்தி,தெலுங்கு என்ற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் விஜய் சேதுபதி.தற்போது இவர் நடிகர் சந்தீப் கிஷன் உடன் இணைந்து மைக்கேல் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.கரண் சி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இவர்களுடன் கவுதம் மேனன்,வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார்கள்.அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது

Advertisement

இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.இப்படத்தினை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது படத்தின் கதையில கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்,படம் ரொம்ப இழுக்கு கிளைமாக்ஸ் பார்க்கும் பொழுது ஆங்கில படத்துல இருந்து எடுத்திருக்காங்க,படத்துல காதல் பகுதி சுத்தமாக பொருந்தவில்லை.இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருக்கலாம் போல உள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in