The Indian Times

தளபதி 67 படத்திற்கு படைவீரர்களுடன் கிளம்பிய லோகேஷ் கனகராஜ் …. விமானத்தினுள் அலப்பறை கொடுக்கும் தளபதி விஜய்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவருக்கு அண்மையில் வாரிசு படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் 11 நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.இப்படத்தினை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்க உள்ளார்.லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் வேளைகளில் பயங்கர பிசியாக உள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க உள்ளது, இப்படத்தில் நடிகர் அர்ஜுன், ப்ரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளனர்.கதாநாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளார்

Advertisement

தற்போது ஹைதராபாத்திற்கு படப்பிடிப்பிற்காக செல்ல லோகேஷ் கனகராஜ் தனது குழுவினருடன் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.பின்னர் தளபதி விஜய் கெத்தாக என்ட்ரி கொடுத்து விமானத்திற்குள் சென்றுள்ளார்,விமானத்தில் செல்லம் தனது படக்குழுவினரை வீடியோ எடுத்து மகிழ்ந்துள்ளார் தளபதி விஜய்.இந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது,வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் இந்த வீடியோவில் ஏஜெண்ட் டீனாவும் இருப்பதால் படம் LCU எனபது உறுதியாகியுள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in