The Indian Times

தாறுமாறாக வெளியாகிய தளபதி 67 படத்தின் பெயர்…. TITLE-யே அனல்பறக்கே அப்போ படம் என்ன பண்ணுமோ தெரியலையே

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது. இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்திருந்தார்.இப்படத்தில் படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிக்கா நடித்துள்ளார்.பொங்கலுக்கு இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படத்தினை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.இப்படம் வெளியாகி11நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

Advertisement

இந்நிலையில் விஜய் இந்த வெற்றிக்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளார்.இப்படத்தின் வேலைகள் துவங்கிவிட்டன. ஜோடியாக த்ரிஷா நடிக்க முக்கிய வேடங்களில் அர்ஜூன் மற்றும் மன்சூர் அலிகான் நடிக்க உள்ளனர்.தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு தொடர்ந்து அப்டேட் மேல் அப்டேட்டை கொடுத்து அவர்களை திக்குமுக்காட செய்து வருகிறது.அதன்படி தற்போது படத்தின் பெயரை வெளியிட்டுள்ளது.தளபதியின் இந்த 67வது படத்திற்கு படக்குழு லியோ என பெயரிட்டுள்ளது.பெயர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in