The Indian Times

வாள் தூக்கி வந்தான் பாரு.. வந்து சண்டை போட எவனும் இல்லை… தளபதி விஜயின் “LEO” TITLE TEASER இதோ

மாண்புமிகு மாணவன் ஆக சினிமாவுக்குள் வந்து இன்று வாத்தியாராக உயர்ந்துள்ளார் தளபதி விஜய்.இதில் இருக்கும் கஷ்டம் உழைப்பு அவமானங்கள் அனைத்தும் அவருக்கு மட்டுமே தெரியும்.பல அடிகள் வாங்கி தன்னை செதுக்கி இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார்.இவரின் பலமே இவரின் ரசிகர்கள் தான்,அந்தளவிற்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் தளபதிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.அந்தளவிற்கு கடுமையாக உழைத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.வெளியாகிய 11 நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி வரை வசூல் செய்துள்ளது.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு 67வது படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.இப்படத்தின் அப்டேட் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் போதும் போதும் என்கிற அளவுக்கு கொடுத்து வருகிறது.அதன்படி செவன் ஸ்க்ரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்,த்ரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

Advertisement

இப்படத்தின் பெயர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.அதன்படி படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.லோகேஷ் இயக்கத்தில் தளபதி நடிக்கும் 67வது படத்திற்கு லியோ என படக்குழு பெயரிட்டுள்ளது.படத்தின் பெயர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் டைட்டில் டீசரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.டீசரில் விஜய் வாள் செய்யும் காட்சிகள் ரசிகர்களுக்கு கூஸ் பம்ஸ் ஆக்கி உள்ளது.

Embed video credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in