The Indian Times

தந்தனக்கா தனக்குநக்கா.. ஒசரட்டும் பத்துதல பாடல் வெளியாகியது

பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்.இவரை ரசிகர்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் ,சிம்பு என செல்லமாகதான் அழைப்பார்கள்.அந்தளவிற்கு இவர் மீது பிரியம் வைத்துள்ளனர். மகனை நடிகனாக்க வேண்டும் என ராஜேந்தர் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்து அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.நடை உடை பாவனை என அனைத்திலும் புதிய யுக்தியை கையாண்டு ரசிகர்களை தனது வசம் இழுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இவர் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.மேலும் படத்தின் டிரைலரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் படத்தின் எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது.

Advertisement

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒசரட்டும் பத்துதல பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. ராஜ துறை பாடலை வரிகளில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் தீப்தி சுரேஷ்,ஸ்ரீகாந்த் ஹரிஹரன்,சத்யப்ரகாஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பாடல் சிம்புவிற்கு ஏற்றாற்போல செம்ம மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வீடியோவிற்கு லைக்குகளை கொடுத்து வைரலாக்கி வருகின்றனர்.

Embed video credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in