The Indian Times

உலக சினிமாவுக்கே சவால் விடும் அளவிற்கு வெளியாகிய பொன்னியின் செல்வன் 2 TRAILER இதோ….

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இயக்குனர்கள் இயக்க முயன்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.சோழர்களின் வரலாறை பறைசாற்றும் கல்கி எழுதிய நாவல் தான் இந்த பொன்னியின் செல்வன்.நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு இப்படத்தினை பெரும் பொருட்செலவில் இயக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய காவியத்தினை கொடுத்து பெருமை படுத்தியுள்ளார் என்று தான் கூற வேண்டும்.இப்படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.உலகம் முழுவதும் பல மக்களால் அதிகம் வரவேற்க்கப்பட்டது.தமிழரின் பெருமையை உலகம் முழுவதும் இப்படம் கொண்டு சென்றுள்ளது என்றே கூறலாம். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை மணிரத்தினத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆன மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.படத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம்ரவி ,பிரபு,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இரண்டாம் பாகத்தினை படக்குழு அடுத்த மாதமான ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது.இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடத்தி வருகிறது.

Advertisement

தற்போது இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.முதல் பகுதியினை விட இந்த இரண்டாம் பகுதி சிறப்பாக இருக்கும் என்பது ட்ரைலெரில் தெளிவாக காண முடிகிறது.மேலும் முதல் பாகத்தினை போலவே இந்த இரண்டாவது பாகத்திலும் இசை புயல் தனது இசையால் சோழர்களை மீண்டும் கண் முன்னே நிறுத்தியுள்ளார் எனலாம்.ட்ரைலரை பார்த்த ரசிகர்கள்,நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றிபெறும் படத்தினை காண ஆவலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : suntv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in