The Indian Times

வாய் இருந்தா தானே இனி பேசுவே… வாயை கிழித்த AGR… பத்துதல SNEAK PEEK வீடியோ

இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்.தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.புது புது ஸ்டைலை சினிமாவில் அறிமுகப்படுத்தி இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்த சிலம்பரசன்.ஆண்கள் பெண்கள் என போட்டி போட்டு இவருக்கு ரசிகர்களாக மாறினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.தற்போது இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆன பத்து தல படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் சில நிமிட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.இதில் சிலம்பரசன் முழு நெகட்டிவ் கதாபாத்திரமாக நடித்து அசதியெடுத்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் முழுவதும் மாறுபட்ட எஸ்டிஆர் படத்தில் காண்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : MOVIEBUFF TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in