The Indian Times

Rio மகளை கொஞ்சி விளையாடும் Cooku with comali Pavithra!

விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. இவர் இந்த நிகழ்சிக்கு முன்பு சில குறும்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த நிகழ்ச்சி தான் இவரை பலரும் அறிய செய்தது என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்தே புகழ் பிரபலமடைந்து விட்டார். இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட பவித்ராவை புகழ் ரூட்டு விடும் காமெடி அனைவரையும் கவர்ந்தது. அதன் மூலம் பவித்ராவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரை சென்றார் பவித்ரா.

Advertisement

இதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் மூலம் சில படவாய்ப்புகளும் வரிசையாக பவித்ராவுக்கு கிடைத்து வருகிறது. நடிகர் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் நாய் சேகர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பவித்ரா. மேலும் கதிர் நடிக்கும் யூகி படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சில ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார் இவர். சமீபத்தில் கூட ரியோவுடன் சேர்ந்து கண்ணம்மா என்னம்மா என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார் பவித்ரா. இந்நிலையில் தற்போது ரியோவின் மகளுடன் பவித்ரா கொஞ்சி விளையாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Galatta youtube channel 

https://www.youtube.com/watch?v=CQn3HWBh5Dc

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in