The Indian Times

Partnership போட்டு பந்தை பறக்கவிட்ட தல தோனி மற்றும் சின்ன தல ரெய்னா!

உலகிலேயே சிறந்த டி 20 தொடர் என்றால் அது ஐ.பி.எல் தொடர் தான். நாளை ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாக இருக்கிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. இந்நிலையில் அனைத்து வீரர்களும் ஐ.பி.எல் தொடருக்காக பயிற்சி செய்து வருகின்றனர். கடந்த 2020 ஐ.பி.எல் தொடர் துபாயில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. இதனால் கடந்த 2014 க்கு பிறகு தற்போது ஐ.பி.எல் தொடரின் மதிப்பு சரிந்துள்ளது என்று கூறப்படுகிறது.

Advertisement

ஐ.பி.எல் லை திருவிழா போல் ரசித்து பார்த்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா தோற்று பாதிப்பால் ஐ.பி.எல் தொடருக்கு இந்தியாவில் தடை விதிக்க செய்தது. பின்னர் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடியாக காணப்படும் மைதானங்களை பார்க்கும்போது ரசிகர்களை மிகவும் சோகத்திற்குள்ளாகக்கியது. தற்போது 2021 ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடைபெற போகிறது என்றாலும் ஆரம்பத்தில் சில போட்டிகளுக்கு ரசிகர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என்று பல கட்டுப்பாடுகளுடனே நடக்க இருக்கிறது.

ஐ.பி.எல் யில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.தல தோனி இந்த அணியில் இருப்பதாலேயே இந்த அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உலகமெங்கும் உள்ளானர். மூன்று முறை ஐ.பி.எல் தொடரை கைப்பற்றி இருக்கும் இந்த அணி கடந்த 2020 ஐ.பி.எல் தொடரில் சரியாக பெர்பார்ம் செய்யவில்லை.அந்த தவறை இந்த வருடம் செய்து விட கூடாது என்பதற்காக உத்தப்பா , கிருஷ்ணப்ப கவுதம் , மோயின் அலி , புஜாரா ஆகிய வீரர்களை தேர்வு செய்துள்ளது சென்னை அணி.Watch Video Below – Video Embeded Credits Chennai super kings Youtube Channel

தற்போது நாளை மறுநாள் சென்னை அணி மற்றும் டெல்லி அணி மோதுகின்றன. இந்த போட்டிக்காக இரு அணிகளுமே தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணி பயிற்சி எடுக்கும் விடீயோக்களை வெளியிட்டுள்ளது csk நிர்வாகம். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in