The Indian Times

லூசு பெண்ணே பாடலை பாடி மேடையில் வெறித்தனமாக நடனமாடிய சிம்பு….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன். சிம்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் இவர்.பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் இவர் ஆவார்.தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார் சிம்பு .பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியுள்ளார்.இதனால் இவரை அனைவரும் செல்லமாக லிட்டில் சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைப்பார்கள். அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர். 2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது ரசிகர்களுக்காக முற்றிலும் குறைத்து கேலி செய்தவர்கள் வாயை அடைத்து படங்களில் பழைய சிம்புவாக நடித்து அசத்தி வருகிறார்.இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.

Advertisement

தற்போது இவர் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ளார்.சென்னையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிம்பு பேசிய வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியில் பேசிய அவர் இங்க தட்டி உட தான் ஆளு இருக்கு தட்டி கொடுக்க ஆள் இல்லை,இந்த படத்தை நான் கவுதம் கார்த்திக் காகத்தான் ஒப்புக்கொண்டேன் ,என பேசி ரசிகர்களுக்காக லூசு பெண்ணே பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.

Embed video credits : TREND TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in