ஜாலியோ ஜும்கானா – Official Lyric Video | Beast | Thalapathy Vijay | Nelson | Anirudh

இளைய தளபதி நடிப்பில் மாஸாக வெளியாகவுள்ளது பீஸ்ட் திரைப்படம். இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. டான் படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடத்துள்ளார். இவர்களுடன் இணைந்து செல்வராகவன், யோகி பாபு, வி.டி.வி கணேஷ், கிங்ஸ்லி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ஜாலியோ ஜும்கானா பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. Watch the below Video..

கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

ஜாலியோ ஜும்கானா - Official Lyric Video | Beast | Thalapathy Vijay | Nelson | Anirudh 1

விளம்பரம்

“தளபதி 65” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட விஜய் நடிக்கும் 65வது படத்தின் தயாரிப்பு உரிமையை சன் பிக்சர்ஸ் 2020 ஜனவரி தொடக்கத்தில் வாங்கியது, இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கவிருந்தார். இருப்பினும், முருகதாஸ் தனது சம்பளத்தை குறைக்க மறுத்ததால், தயாரிப்பாளர்கள் முருகதாஸை அக்டோபர் 2020 இல் படத்திலிருந்து வெளியேற்றினர். பின்னர் நெல்சன் இந்த ​படத்திற்கு ஒரு புதிய ஸ்கிரிப்டை எழுதினார். கோவிட்-19ன் இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு தடைபட்டாலும், ஜூலை 2021 இல் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி டிசம்பர் மாதம் முடிவடைந்தது. Youtube Video Code Embed Credits: Sun TV

ஜாலியோ ஜும்கானா - Official Lyric Video | Beast | Thalapathy Vijay | Nelson | Anirudh 2

விளம்பரம்

இந்த படத்தில் “அரபிக் குத்து” என்ற பாடலை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார். இந்த பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 197 மில்லியன் பார்வையாளர்களை 1 மாத இடைவெளியில் கடந்து சாதனை படைத்துள்ளது. சில நாட்களில் 200 மில்லியனை கடக்கும் என்பதில் ஐயமில்லை. சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் படத்தின் 2வது சிங்கிள் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. “ஜாலியோ ஜும்கானா” என்ற அந்த பாடல் பார்க்கவே செம்ம கூலாக இருந்தது. தற்போது அதன் முழு பாடல் வெளியாகியுள்ளது. அந்த பாடலை நீங்களும் காண.. Watch the below Video..

கட்டாயம் படிக்கவும்  பட்டு சேலையில் பட்டையை கிளப்பும் CWC சிவாங்கி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment