The Indian Times

“வாடிவாசல்” படம் பற்றி கிடைத்த புது அப்டேட்..வெளியான புகைப்படங்கள் | VaadiVasal

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம்தான் வாடிவாசல். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த படம். சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் சமூக அக்கறையை காட்டி வருகிறார் நடிகர் சூர்யா. அந்த வகையில் இந்த படம் எப்படி இருக்கப் போகிறது? எந்த கதையை மையமாக கொண்டு இருக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் அவரது ரசிகர்களிடையே மோலோங்கி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒரு கட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைவரும் போராட்டத்தில் குதித்தனர்.

Advertisement

அந்த கதையை மையமாக கொண்டு படம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவும் சரி, அவரது குடும்பமும் சரி சமூக அக்கறை கொண்டவர்கள். சூர்யா அகரம் அறக்கட்டளை மூலமாக பல குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். அதேபோல் அவரது தம்பி கார்த்தி விவசாயிகளுக்காக அமைப்புகள் நடத்தி வருகிறார். சூர்யாவின் மனைவி ஜோதிகா நல்ல சமூக கருத்து கொண்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதனால் இவர்கள் நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. இருளர் இன மக்களின் விடியலுக்காக உண்மை கதையை எடுத்து நடித்த ஜெம்பீம் படம் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. அந்த வரிசையில் வாடிவாசல் படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Youtube video code embed credits: cineulagam

Advertisement

தற்போது இந்த படத்தின் ஒரு புது அப்டேட் கிடைத்துள்ளது. அதில் படத்தின் டெஸ்ட் ஷூட்டிங்க்காக சில காட்சிகளை எடுப்பதற்காக வாடிவாசல் போன்ற இடத்தில் இருந்து வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் சூர்யா, வெற்றிமாறன் ஆகியோருக்கு மாலை மரியாதை எல்லாம் செய்யப்பட்டுள்ளது. படத்தின் வேலைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதால் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in