The Indian Times

சொப்பன சுந்தரி நான்தானே!! அனல் பறக்க ஆட்டம் போட்ட ஆல்யா மானசா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரபல தொடர் ராஜா ராணி.இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது.எந்த அளவுக்கு என்றால் முதல் பகுதிக்கு மக்கள் கொடுத்தா ஆதரவினை கண்டு தற்போது இந்த நாடகத்திற்கு இரண்டாவது பகுதியை எடுத்து வருகின்றனர்.இந்த தொடரின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் தான் ஆல்யா மானசா,தனது முதல் நாடகத்திலேயே நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய வரவேற்பினை மக்களிடம் பெற்றார்.அன்று அளித்த அதே வரவேற்பினை ரசிகர்கள் இன்று வரை இவருக்கு வழங்கி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த கார்த்திக் என்பவரையே திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.இவருக்கு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் என இரண்டு குழந்தைகள் உள்ளது.இதனால் சினிமா பக்கம் தலைகாட்டாமல் குழந்தைகளை வளர்த்து வருவதில் குறிக்கோளாக இருந்தார்.குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்த ஆல்யா தற்போது குழந்தைகள் வளர்ந்துள்ளதால் மீண்டும் நாடகங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார்.தற்போது இனியா என்கிற புதிய சீரியலில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்

இனியா சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது ஆல்யா குத்தாட்டம் போட்டுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஷேர் செய்யப்பட்டு இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.ரசிகர்கள் ஆல்யா நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in