The Indian Times

திடீரென மருத்துவமனையில் அனுமதியாகிய GP முத்து… ரசிகர்கள் சோகம்

தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜிபி முத்து.சாதாரண மரக்கடை வைத்து வாழ்க்கையை ஒட்டி வந்தவர் இவர். விளையாட்டு தனமாக டிக் டாக்கில் வீடியோ போட தொடங்கவே அதுவே இவருக்கு வாழ்க்கை என்று மாறியது.தொடர்ந்து டிக் டாக்கில் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வைரலாகி வந்தார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாக்கியது.இந்நிலையில் திடிரென டிக் டாக்கினை தடை செய்யவே செய்வதறியாது இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அதன்பின் இவர் யூடியூப் சேனல் தொடங்கி,அதில் ரசிகர்கள் இவருக்கு அனுப்பும் கடிதங்களை நகைச்சுவையாக படித்து பிறரை சிரிக்க வைத்து பெரும் அளவில் வரவேற்பினை பெற்றார்.தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என மிகவும் பிரபலமாகி நடிக்க தொடங்கிவிட்டார் ஜிபி முத்து.தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் பம்பர் படத்தில் நடித்துள்ளார்.தற்போது ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் நிகழ்ச்சியில் இருந்து குடும்பத்தை காணாமல் இருக்க முடியாது என கூறி வெளியேறினார்.

Advertisement

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் மேலும் படங்களிலும் நடித்து வருகிறார் ஜிபி முத்து.இந்நிலையில் ஓய்வில்லாமல் நடித்து வரும் ஜிபி முத்து தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் புகைப்படத்தினை பார்த்து பெரும் சோகம் அடைந்துள்ளனர்.விரைவில் அவர் குணமாக வேண்டும் எனவும் கமெண்டில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in