The Indian Times

Ashwin, Pugazh , Bala சேர்ந்து தயாரித்த முரட்டு single பாடல்! சிக்கி தவித்த இசையமைப்பாளர் Godson

Watch the video below விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

அந்த வகையில் இந்த ஷோ வின் மூலம் தற்போது அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக வளம் வருபவர் குக்கு வித் கோமாளி அஸ்வின். அதிலும் பெண்களின் கனவு கண்ணனாகவும் வளம் வளம் வருகிறார் அஸ்வின். சமீபத்தில் கூட இவர் நடித்த குட்டி பட்டாஸ் ஆல்பம் அதிகளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான்.

இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக lockdown போட இருப்பதால் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக தள்ளி வைக்கபட்டிருக்கிறது. இந்நிலையில் புகழ் , அஸ்வின் , பாலா மூவரும் சேர்ந்து முரட்டு சிங்கள் பாடலை பாடி இசையமைப்பாளர் காட்சனுடன் சேர்ந்து தயாரித்த பாடல் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch Video Below – Video Embeded Credits Behindwoods tv Youtube Channel

 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in