The Indian Times

அழகி போட்டியில் கலந்து கொண்ட மணிமேகலை! விஜய் சேதுபதி ஸ்டைலில் கலாய்த்த ஹுசைன்

குக்கு வித் கோமாளி நிகழிச்சியில் கோமாளிகளுள் ஒருவரானவர் தான் மணிமேகலை. இவரை செட்டில் அனைவரும் சூனிய பொம்மை என்று செல்லமாக கிண்டல் செய்வர். இவர் ஒருவர் மட்டும் தான் நடுவர்களையும் எளிதாக கலாய்த்து ரசிக்கும் படியான குறும்புகளை செய்து வருபவர். இவர் 2017ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஹுசைன் என்னும் நடன கலைஞரை பதிவு திருமணம் செய்தார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ததை அடுத்து இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஆரம்ப கட்ட காலங்களில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்து புகழ் பெற்றார். பின்பு வேறொரு தனியார் தொலைக்காட்சியில் கணவன் மனைவியாக பங்கேற்றனர்.

இதன் பின்பு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பங்கேற்ற இவர் பின்பு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் தன்னோடு சேர்ந்து சமைக்கும் குக்குகளை இவர் வச்சி செய்வதில் இவர் புகழ்பெற்றவர். இந்நிலையில் இவர் தன் கணவருடன் சேர்ந்து யூட்யூப் சேனல் ஒன்றை துவங்கினார். இந்த கொரோனா காலத்தில் அவர் ஊரில் செய்யும் குறும்பு தனமான விஷயங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார் மணிமேகலை.

இந்நிலையில் தற்போது 2010 ஆம் ஆண்டு அழகி போட்டியில் கலந்து கொண்ட மணிமேகலையின் புடைபடம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ஹுசைன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் விஜய் சேதுபதி ஸ்டைலில் கலாத்திருக்கிறார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in