The Indian Times

FZ பைக்கை ஓட்டி மாஸ் காட்டிய ஆல்யா மானசா!

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீரியல். இதில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவருமே ரசிகர்களின் மனதில் அதிகளவில் இடம் பிடித்தனர். சஞ்சீவ் கார்த்தி என்ற கதாபாத்திரத்திலும் ஆல்யா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர்கள் சீரியலில் ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

இவர்களது திருமணத்தில் ஆல்யா மானசா குடும்பத்தினருக்கு சிறிதளவும் விருப்பம் இல்லை. பல எதிர்ப்புகளை தாண்டி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஐலா சையத் என்று பெயர் சூட்டி இருந்தனர். சமீபத்தில் ஐலா வின் பிறந்தநாளை சிறப்பாக கொட்டடி வீடியோ வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இவரை போல் ஒரு கணவர் அமைந்திட மாட்டாரா என்று பல பெண்கள் ஏங்குகிற அளவுக்கு சஞ்சீவ் தன் காதலை வெளிப்படுத்துகிறார் என்றே கூறலாம். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் ஆல்யா மற்றும் சஞ்சீவ் அவ்வப்போது தன்னுடைய குட்டி மகளின் வீடீயோவையும் , குறும்புத்தகமான வீடியோவையும் சமூகவலைத்தளங்களில் வெளியிடுவர். இந்நிலையில் ஆல்யா மானசா பைக் ஓட்டும் விடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in