The Indian Times

தளபதி 65 படத்தின் First Look Teaser இதோ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான்.

பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர்.

Advertisement

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது.

கொரோனா பரவலின் காரணமாக தற்காலிகமாக தளபதி 65 ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நாளை தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 65 போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் என Beast  வெளிவந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in