The Indian Times

மீண்டும் கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்! Viral Video

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் நடிகர் தல அஜித். தல அஜித்தின் அடுத்த படம் வலிமை மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். போனி கபூரின் தயாரிப்பில் இயக்குனர் எச். வினோத்தின் அதிரடி த்ரில்லரில் போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். இந்த படத்திற்காக இசை இயக்குனர் யுவன் சங்கர் ராஜா மற்றும் DOP நீரவ் ஷா ஆகியோரையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Advertisement

படக்குழு சென்னை மற்றும் ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டி உள்ளிட்ட இடங்களில் முக்கியமான காட்சிகளை சூட் செய்துள்ளது. அதுமட்டுமில்லாது ஸ்பெயின் நாட்டிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா குமகொண்டா, யோகி பாபு, குர்பானி, புகாஜ், அச்சியுத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருப்பது வலிமை படத்தின் first look காக தான்.

Advertisement

இந்நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் தல ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் இந்தியா , நியூஸிலந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அப்போது மைதானத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்த கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in