The Indian Times

என்னோட Biopic ல இந்த பிரபல நடிகர் தான் நடிக்கணும்! மனம் திறந்த சின்ன தல ரெய்னா

Watch the video Below ஒரு காலத்தில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல் ரௌண்டராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் இந்திய அணிக்கு மிக சிறந்த பக்க பலம் என்றே கூறலாம். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னா தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த வருட ஐ.பி.எல் தொடரிலும் காலத்தில் இறங்கி தன்னுடைய சிறப்பை வெளிக்காட்டினார் ரெய்னா.

Advertisement

ஆனால் கொரோனா பரவளின் காரணமாக இந்த வருட ஐ.பி.எல் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஐ.பி.எல் 2021ன் மீதி உள்ள போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று கூரப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் ரெய்னாவிடம் உங்களடாது வழக்கை வரலாறு படத்தில் யார் ஹீரோ வாக நடிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு அவர் சூர்யா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Advertisement

தற்போதைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக இருப்பவர் சூர்யா.இவர் இறுதியாக நடித்த சூரரை போற்று திரைப்படம் இந்தியளவில் பெரிய வரவேற்பை கொடுத்தது. மேலும் இவருக்கு கோலிவுட்டில் மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இதை தொடர்ந்து சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் ரெய்னா தன்னுடைய படத்தில் சூர்யா நடித்தால் சரியாக இருக்கும் என்று கூறியது சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. Watch the video Below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in