The Indian Times

முழு நேர Chef ஆகவே மாறிய நடிகை வாணி போஜன்! ரசித்து பார்க்கும் ரசிகர்கள்

சின்னத்திரையில் பிரபலமடைந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் நடிகைகள் ஏராளம் இருக்கின்றனர். அந்த வகையில் தெய்வ மகள் என்ற சீரியலின் மூலம் பலரை கவர்ந்து இழுத்த நடிகை வாணி போஜன் தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகையாக வளம் வருகிறார். இவர் சின்னத்திரையில் அறிமுகமாவதற்கு முன்னாடியே ஒரு சில படங்களில் பலரால் அறியப்படாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் வாணி.

Advertisement

அந்த வகையில் இவர் முதல் முதலில் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு அதிகாரம் 79 என்ற படத்திலும் நடித்துள்ளார் வாணி போஜன். இதை தொடர்ந்து ஆஹா , மாயா என்ற சீரியல்களில் நடித்துள்ளார் வாணி போஜன். ஆனால் அதன் பிறகு நடித்த தெய்வ மகள் சீரியல் தான் வாணி போஜனுக்கு கைகொடுத்தது. இந்த சீரியலின் மூலம் இல்லத்து அரசுகளின் மனதில் இடம் பிடித்த அவர் , கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் பதிய ஆரம்பித்தார்.

Advertisement

அதை தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு , கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டார் வாணி. அதன் பிறகு ஓ மை கடவுளே , லாக் அப் படங்களில் நடித்தார் வாணி போஜன். இவர் இறுதியாக மலேசிய டு அம்னீஷியா என்ற திரைப்படத்தில வைபவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது வாணி போஜன் ஒரு பிரபலமான ஹோட்டலில் சமையல் செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://www.youtube.com/watch?v=HQYCoHMsvb8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in