The Indian Times

நயன்தாராவை இன்னும் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்? Simple ஆக பதிலளித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டதோடு அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று அணைத்து முன்னணி தமிழ் நடிகர்களுடனும் ஜோடி போட்ட நடிகை நயன்தாரா. தற்போது இவர் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்தது.

Advertisement

விக்னேஷ் சிவன் தமிழில் நானும் ரௌடித்தான், தானா சேர்ந்த கூட்டம் என்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் தற்போது விஜய் சேதுபதி , சமந்தா ஆகியோரை வைத்து காதுவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார். எங்கு சென்றாலும் ஜோடியாக புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் அப்லோட் செய்து வரும்

Advertisement

இந்த ஜோடிகள் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்ப்ர்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர் ஏன் இன்னும் நீங்க நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளவில்லை, நாங்க ஆவலோடு காத்திருக்கிறோம் அதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு விக்னேஷ் சிவன் ரொம்ப செலவு ஆகும், நாங்க அதுக்காக காசு சேர்த்து வெச்சுட்டு இருக்கோம், கொரோனா முடியட்டும் என்று பதிலளித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in