The Indian Times

ரஞ்சிதமே…உன்னை உதடு வலிக்க கொஞ்சனுமே.. வாரிசு FIRST SINGLE இதோ !

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது. இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது.இதனால் தளபதி ரசிகர்கள் பெரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.தமன் இசையில் தளபதி விஜய் இப்பாடலை பாடியுள்ளார்.பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் நடனத்திலும் தளபதி வழக்கம் போல பட்டையை கிளப்பி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைத்துள்ளார்.ரசிகர்கள் பாடல் மாஸாக அமைந்துள்ளதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : T SERIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in