The Indian Times

Youtuber parithabangal கோபிக்கு திருமணம்…செண்டைமேளம் அடித்து அசத்திய கோபி

சிவகங்கையை சேர்ந்த கோபி எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் இன்று சினிமாவிலும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்தும் சாதித்துள்ளார்.ஆரம்பத்தில் இவர் தனது நண்பர் சுதாகர் உடன் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த நிலையில் மூன் டிவியில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி சின்னத்திரைக்குள் நுழைந்தார்கள்.பின்னர் அங்கிருந்து மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூடியூப் சேனலில் படங்களையும்,பிற நட்சத்திரங்களையும் கலாய்த்து மிக பிரபலமாகினார்கள்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

அதனை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி தற்போது சொந்தமாக பரிதாபங்கள் என்ற சேனல் தொடங்கி தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு அசத்தி வருகின்றனர்.இவர்களது சேனலில் மட்டும் சுமார் 12 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.இவர்களுக்கென பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கோபியும் சுதாகரும் நெருங்கிய நண்பர்கள்,இதில் சுதாகருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது.திருமணம் முடிந்த பிறகும் தற்போது தொடர்ந்து தங்களது சேனல்களில் யூடியூப் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

அண்மையில் கோபிக்கு நிச்சயம் நடைபெற்ற நிலையில் தற்போது அவருக்கு திருமணம் நடந்துள்ளது.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் சொல்லாமல் திருமணம் செய்துவிட்டிங்கள் என ரசிகர்கள் கேள்வியும் கோபிக்கு எழுப்பி வருகின்றனர்

 

Embed video credits : TREND TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in