The Indian Times

என் மனைவி தான் எனது 8வது உலக அதிசயம்… ரொமான்ஸில் வெளுத்து வாங்கும் ரவீந்தர் மஹாலக்ஷ்மி

தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரம் ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்துபவர் மகாலக்ஷ்மி.இவர் முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது நடிகை மகாலட்சுமி பிரபல சினிமா தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் திடீர் திருமணம் ரசிகர்ளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இருவரும் குறித்து அதிக விமர்சனங்கள் இணையத்தில் எழுப்பப்பட்டது,இவர்களை பற்றித்தான் அனைத்து பத்திரிக்கைகளும் எழுதியது,அந்தளவிற்கு இவர்களது திருமணம் பிரபலம் ஆகியது.லிப்ரா ப்ரொடக்சன் தயாரித்த கட்சி படம் சாந்தனு நடிப்பில் வெளியாகிய முருங்கைக்காய் சிப்ஸ்.இப்படத்திற்கு பிறகு தற்போது ரவீந்தர் எந்த தயாரிப்பு பக்கமும் செல்லவில்லை.விரைவில் மீண்டும் படங்களை தயாரிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

ரவீந்தரும் மஹாலக்ஷ்மியும் ஒரு அழகிய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் காதலுடன் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் பொழுது இவர்கள் எவ்வளவு பாசமாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது,இவர்கள் புகைப்படம் வெளியானால் அதுதான் அன்று இணையத்தில் மிகப்பெரிய ட்ரெண்டிங்.தற்போது தனது மனைவி மஹாலக்ஷ்மியுடன் ரோமேன்ஸ் செய்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் ரவீந்தர்,மேலும் என் மனைவி தான் எனது 8வது உலக அதிசயம் எனவும் கவிதைகளால் காதலை குறிப்பிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in