அவசரமாக சென்ற நிலையிலும் ரசிகருக்காக நின்று புகைப்படம் கொடுத்த அஜித்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அவசரமாக சென்ற நிலையிலும் ரசிகருக்காக நின்று புகைப்படம் கொடுத்த அஜித் 1

விளம்பரம்

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.தனது குடும்பத்துடன் தல அஜித் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித்,இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

அவசரமாக சென்ற நிலையிலும் ரசிகருக்காக நின்று புகைப்படம் கொடுத்த அஜித் 2

விளம்பரம்

தல அஜித் படப்பிடிப்பிற்காக கலந்துகொள்ள வெளியூர் செல்ல அடிக்கடி சென்னை விமான நிலையம் வருவார், இதனால் இவரது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது உண்டு.தற்போது ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அஜித் அவசரமாக சென்று கொண்டிருக்கும் பொழுது ரசிகர் ஒருவர் அவருடன் புகைப்படம் எடுப்பதை தெரிந்துகொண்டு,அஜித் மெதுவாக நடந்து வந்து அவருடன் புகைப்படம் எடுத்து பின்னர் சிரித்துக்கொண்டு சென்றுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அஜித் ரசிகர்களை மதிப்பதை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment