The Indian Times

எனக்கு பொழுதுபோக்கே புலி கூட விளையாடுறதுதான்… நடிகர் சந்தானம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர் சந்தானம் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சிறந்த நகைச்சுவை நடிகர்.இவர் நகைச்சுவைக்கு என பல ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இருப்பினும் காமெடியனாக இனி நடிக்க மாட்டேன் நடித்தால் ஹீரோ தான் என்று கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்,இதில் சில வெற்றிப்படங்கள் அமைந்தாலும்,சில தோல்வி படங்களும் அமைந்துள்ளது.அந்த வரிசையில் தற்போது சந்தானம் இயக்குனர் பீதா இயக்கத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் படம் அண்மையில் வெளியாகி அதுவும் தோல்வியை தான் சந்தித்துள்ளது.

Advertisement

இருப்பினும் விடா முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்,அங்கு இவர் புலியுடன் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோவில் சந்தானம் துளியும் பயம் இல்லாமல் புலியின் வாலை பிடித்து போஸ் கொடுத்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in