The Indian Times

எனக்கும் பசங்க இருக்காங்க… உங்க கஷ்டம் புரியுது… குழந்தையுடன் தனியாக வந்த பெண்ணின் பெட்டிகளை தூக்கி வந்த அஜித்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் . இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.இப்படமும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் படம் நடிக்க உள்ளார்.இப்படத்திற்கான வேலைகள் தொடங்கியுள்ளது.

Advertisement

தற்போது இவர் விமான நிலையத்தில் எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.லண்டன் விமான நிலையத்தில் சென்னைக்கு குழந்தையுடன் தனியாக வரும் பெண்ணின் பைகளை அஜித் தூக்கிக்கொண்டு வந்து அவரது இருக்கையில் வைத்துள்ளார்.அதற்கு அந்த பெண் வேண்டாம் என்று கூறியும் எனக்கும் பசங்க இருக்காங்க உங்க கஷ்டம் புரியுது என அன்பாக பேசியுள்ளார்.இதனை அந்த பெண்ணின் கணவர் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.பலரும் அஜித்தை பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in