The Indian Times

மீண்டும் வில்லனாக சினிமாவில் களம் இறங்கும் அமாவாசை…. அங்ககாரன் டீசர் இதோ

தமிழ் சினிமாவை வில்லனாகவும்,கதாநாயகனாகவும் கலக்கிய நடிகர் சத்யராஜ். இவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.1978 ஆம் ஆண்டு சட்டம் என் கையில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார் சத்யராஜ். அப்பொழுதே ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு வில்லனாக கலக்கு கலக்கியவர்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி சினிமாவிலும் படங்கள் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் இவர் கட்டப்பாவாக நடித்த பாகுபலி படம் பெரும் வரவேற்பினை உலகளவு பெற்றது.இதனை தொடர்ந்து பல மொழிகளிலும் பிரபலம் ஆகினார் சத்யராஜ்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடித்து படத்தினை தாங்குவதில் இவர் வல்லவர். இவருக்கு சிபிராஜ் என்ற மகனும் ,திவ்யா என்ற பெண்ணும் உள்ளார்.சிபிராஜ் ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார்.மகள் திவ்யா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

Advertisement

சத்யராஜ் படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக உள்ளார்.அதன்படி தற்போது இயக்குனர் மோகன் இயக்கத்தில் அங்ககாரன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் அப்புக்குட்டி மற்றும் அங்காடி தெரு மகேஷ் நடித்துள்ளனர்.இந்த படத்தில் சத்யராஜ் முழுமையாக மாறுபட்ட தோற்றத்தில் போலீசாக மிரட்டியுள்ளார்.ஆரம்பத்தில் இருந்து இவர் பேசும் வசனங்கள் நமக்கு அமைதிப்படை சத்யராஜை தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.டீசரில் நான் அரசியல் வருவேன் என கூறி யாரையும் ஏமாற்றமாட்டேன் என மிகப்பெரிய நடிகரை தாக்கி பேசியுள்ளது போல கூறப்படுகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் கோயம்பத்தூர் குசும்புனு இதைத்தான் சொல்லுவாங்க போல என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : TREND MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in