The Indian Times

படம் ரொம்ப நல்லா இருக்கு.. பாராட்டு மழையில் ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி… PUBLIC REVIEW

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து நீதானா அவன் என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்.இந்த படத்திற்கு பிறகு அவர் 8 படங்கள் தமிழில் நடித்துள்ளார்.பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய அட்டகத்தி படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.எந்த படத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து போராடி வந்தார் அப்பொழுதுதான் விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மி படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.இந்த ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் ரசிகர்களை தன்னை திரும்பி பார்க்க செய்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும்,தனுஷுக்கு ஜோடியாக வட சென்னை படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படவைத்தார்.தற்போது வத்திக்குச்சி பட இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் ட்ரைவர் ஜமுனா படத்தில் நடித்துள்ளார்.அண்மையில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது

Advertisement

இன்று இயக்குனர் சார்லஸ் இயக்கத்தில் சொப்பன சுந்தரி படம் வெளியாகி உள்ளது.இப்படத்தில் இவருடன் தீபா சங்கர்,லட்சுமி பிரியா,கருணாகரன்,சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அஜ்மல் என்பவர் இசையமைத்துள்ளார்.படத்தினை பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் ரொம்ப நல்லா இருக்கு,டார்க் காமெடி நல்லாவே ஒர்கவுட் ஆகியிருக்கு.படம் நல்ல வந்துருக்குன்னு சொல்லலாம் படத்துல காமெடியும் இருக்கு எமோஷனல் இருக்கும்.நல்ல காமெடி படமா இருக்கு என பாராட்டி வருகின்றனர்.

Embed video credits : TN360

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in