The Indian Times

ஜெய் பீம் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் GOOD NIGHT படத்தின் டீசர் இதோ!!!

ஜெய் பீம் படத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நடிகர் மணிகண்டன்,இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.எந்த படத்திலும் இவருக்கு கிடைக்காத அங்கீகாரம் தற்போது ஜெய் பீம் படத்தில் கிடைத்துள்ளது.இவர் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகிய படம் பீட்ஸா 2.இப்படத்தில் இவருக்கு பெரிய கதாபாத்திரம் அமையவில்லை.இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய இந்தியா பாகிஸ்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இப்படி சினிமாவில் படிப்படியாக கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு தான் ஜெய் பீம்.இப்படத்தில் தனது முழு உழைப்பையும் கொடுத்து இன்று கதாநாயகனாக உயர்ந்துள்ளார் மணிகண்டன்.தற்போது இவர் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் குட் நைட் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் ரமேஷ் திலக்,பக்ஸ் ,பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்துள்ளனர். மில்லியன் டாலர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது சான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ட்ரைலரை பார்க்கும் பொழுது தூக்கத்தால் ஒரு இளைஞரின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கபடுகிறது என்பதை தெளிவாக காண்பித்துள்ளார்கள். ஜெய் பீமை தொடர்ந்து புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இப்படம் மணிகண்டனுக்கு பெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் எனவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in