The Indian Times

Viral ஆகும் வாத்தியாரே Memes! வெச்சு செய்யும் நெட்டிசன்கள்

சமீபத்தில் ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சர்பட்டா பரம்பரை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும்

என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. இந்த படதில் ஆர்யா மட்டுமல்ல படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது.

Advertisement

நடிகர் பசுபதி , கலையரசன் , ஜான் விஜய் , நடிகை துஷாரா விஜயன் என பல நடிகர்கள் மிக சிறப்பாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டுருக்கலாமே என்று ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு தரமான படத்தை

கொடுத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். ஆர்யாவை விட அதிக ரசிகர்களை கவர்ந்த கதாபாத்திரம் என்றால் அது டான்சிங் ரோஸ் தான். தற்போது வரை இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த திரைப்படம்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு காட்சியில் கபிலன் , ரங்கன் வாத்தியாரை சைக்ளில் கூடி செல்லும் காட்சி அமைந்திருக்கும். அதை வைத்து இன்று மீம்கள் ட்ரெண்டாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in