The Indian Times

Keerthy Suresh , Mahesh Babu உடன் நடிக்கும் புதிய படத்தின் Teaser | Sarkaru Vaari Paata Teaser

தற்போதைய தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாராக விளங்குபவர் நடிகர் மகேஷ் பாபு. தெலுங்கில் ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் ஏராளம். எப்படி தமிழ் சினிமாவிற்கு தளபதி விஜய் அதே போல் தெலுங்கிற்கு மகேஷ் பாபு. ஏனெனில் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வந்த கில்லி திரைப்படம் தெலுகு படமான ஒக்கடு என்ற படத்தின் ரீமேக் தான். அதில் மகேஷ் பாபு

ஹீரோவாக நடித்திருப்பார். அதே போல் விஜய் நடித்த போக்கிரி திரைப்படமும் தெலுங்கில் மகேஷ் பாபு படகின் ரீமேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு மகேஷ் பாபு நடிப்பில் வரவிருக்கும் திரைப்படமான Sarkaru Vaari Paata என்ற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷிற்கு தமிழிலும் செரி தெலுங்கிலும் செரி அதிகளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் தமிழில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது Sarkaru Vaari Paata படத்தின் டீசர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

https://www.youtube.com/watch?v=2cVu7KZxW3c

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in